பதப்படுத்தப்பட்ட உணவு சாப்பிடுவதால் இத்தனை பிரச்சினைகளா?
இப்போதைய காலகட்டத்தை பொருத்த வரையில் பதப்படுத்தப்பட்ட உணவைதான் பெரியவர்களும் சிறியவர்களும் விரும்பி உண்கின்றனர். இந்த உணவை தொடர்ந்து உண்ணும் போது நம் உடலில் எவ்வாறான பாதிப்பு ஏற்படும் என நாம் இங்கு பார்ப்போம்.
மிக அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் அதிக அளவு சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், அதிக அளவிலான சோடியம், உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையே சீர்குலைக்கிற ரசாயனக் கலப்புகள் ஆகியவை கலந்திருக்கும்.
இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்வது உடலில் மிக மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தும். கீழ்வரும் ஆபத்தான மற்றும் நாள்பட்ட நோய்களுக்கும் இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் காரணமாக அமைகின்றன.
உடல் பருமனை அதிகரிக்கும்
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக கலோரிகள் நிறைந்தவை. அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் மிகக் குறைவாக இருக்கும். சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் அதிகப்படியான சேர்க்கைகள் மீண்டும் மீண்டும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டும்.
வகை 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு
தொடர்ந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் டைப் 2 வகை நீரிழவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகளின் கிளைசெமிக் குறியீடு மிக மிக அதிகம் என்பதால் அது ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இதன்மூலம் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை ஏற்படுத்துவதோடு டைப் 2 நீரிழிவு நோய்க்கும் இது காரணமாக அமையும்.
இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் ஆகியவை அதிகமாக இருக்கும். இவை உயர் ரத்த அழுத்தம், எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தல் மற்றும் இதய நோய் ஆபத்துகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம்
சில வகை புற்றுநோய்
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும்போது அது சில வகை புற்றுநோய் ஆபத்துகளை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டது. குறிப்பாக பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆபத்து ஏற்படும் ஆபத்து இதில் அதிகம்.
மனச்சோர்வு
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது அவற்றால் மனச்சோர்வு, மலச்சிக்கல் ஆகிய மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும். பதப்படுத்திய உணவுகள் மனச்சோர்வை ஏற்படுத்தும் வாய்ப்பு 30% அதிகரிப்பதாக நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.