உதவியாளராக நியமித்த உறவினருக்கு சம்பளம் வழங்க மறுத்த அர்ச்சுனா இராமநாதன்
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், தனது உறவினர் ஒருவரை ஆய்வு அலுவலராக நியமித்து பாராளுமன்றத்தால் வழங்கப்படும் மாதாந்த சம்பளத்தினை அவருக்கு வழங்காது கையாடல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தனக்கு மாத சம்பளமாக56,000 ரூபாய் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளாகவும் மொத்தசம்பளமாக. 275,000.ரூபாயினை அவர் பெற்றுவருவதாகவும் அது தனது, வங்கிக் கடன் செலுத்துதல், தனக்கு ஆடை வாங்குதல், தனது மகனுக்கான பாடசாலைக் கட்டணம், வீட்டு வாடகை, முதலிய செலவுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஆளணிக்கான கொடுப்பனவுகள் சில ஒரு உதவியாளர், ஓட்டுநர், தட்டச்சு செய்பவர் மற்றும் செயலாளர். அவர் அதன் அடிப்படையில் தனது உறவினரான தனது மூத்த சகோதரரின் மகன் ராமகிருஷ்ணா அறிவழகனை உதவியாளர்களாக நிமியமித்து அவருக்கு குறிப்பிட்ட சம்பளம் தருவதாக உறுதியளித்திருந்துள்ளார்.
அதன் பிரகாரம் உறவினர் குறைந்த பட்சம் ஒரு பகுதி சம்பளத்தையாவது தனக்கு தருமாறு கேட்டுக் கொண்டதாகவும், ஆனால், செலவிற்குப் போதிய பணம் தன்னிடம் இல்லை எனக் கூறி அதனைத் தர மறுத்ததாகவும் . அச் சம்பளத்தில் தான் தனது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று அர்ச்சுனா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வாக்காளர்கள் மத்தியில் குறிப்பாக அவருக்கு ஆதரவளித்தவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மாத மொத்த சம்பளம் 421,690.58 ரூபா வரி அறவீட்டின் பின்னதான நிகர சம்பளம் 399,382.85 ரூபாய் ஆகும்.