நிவாரண நிதியில் ஊழல் ; எம்.பி அர்ச்சுனா கூறும் ஆலோசனை
அனர்த்த நிவாரண நிதியை பெறுவோரின் முழு விபரங்களும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த நிவாரண நிதியில் மோசடி இடம்பெறாதிருக்க, பயனாளர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்துவது கட்டாயம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரிடர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய முறையில் இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு உரிய உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் பெற்றுக் கொடுக்கப்படுமானால், தனக்கும் அந்த வாகனம் கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்களுக்கு தானும் உரித்துடையவர் என்பதை நினைவுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.