கோட்டாபயவிற்கு எதிராகப் பேராயர் போர்க்கொடி
ஜனாதிபதி நியமித்துள்ள புதிய அமைச்சரவை மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எனவே, புதிய அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும், சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இடைக்கால அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குக்கூட ஜனாதிபதி செவிமடுக்கவில்லை.
மக்கள் கோரிக்கையை ஏற்காமல், புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். இது தீர்வு அல்ல. மக்களை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு வேலை. அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை எம்மாலும் ஏற்கமுடியாது.
போராட்டக்காரர்களை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனத்
தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறான ஜனநாயக விரோதச் செயலில் அரசு ஈடுபடக்கூடாது" என குறிப்பிட்டுள்ளார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        