இன்றைய சமூகத்தின் கல்வி முறை குறித்து கல்லூரி பேராயர் கோரிய மாற்றம்
இன்றைய சமூகத்திற்கு மீண்டும் ஒருமுறை கல்வி குறித்து ஒரு புதிய சிந்தனை முறை தேவை என்று கொழும்பு பேராயர் கர்த்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
காலி புனித அலோசியஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
காலி புனித அலோசியஸ் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கேட்போர் கூடத்தின் திறப்பு விழா கொழும்பு பேராயர் கர்த்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா மற்றும் சிறப்பு விருந்தினர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த அரங்கமானது கல்லூரிக்கான ஒரு புதிய மைல்கல்லாகும், கல்லூரியின் முன்னாள் மாணவரும், EAM மெலிபன் டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான இலியாஸ் அப்துல் கரீமின் நிதி நன்கொடையுடன் கட்டப்பட்டது.
இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக, காலி புனித அலோசியஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையும் இணைந்து கொண்டது.