மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் ஆயரின் அதிரடி முடிவில் திடீர் குழப்பம் (Video)
மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் ஆயர் அதிரடி முடிவெடுத்துள்ள்ளார்.
புனித மிக்கல் கல்லூரியின் மாணவர்களின் ஒழுக்கங்களை பேணுவதற்காக புதிய துறவி ஒருவரை நியமிப்பதாக ஆயர் தெரிவித்துள்ளார்.
அதன்படி 2021 ஆண் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நியமிக்கப்படுவதாக மட்டக்களப்பு ஆயர் தெரிவித்துள்ளார்.
அதோடு அம்மணவர்களின் ஒழுக்கநிலை மிகவும் பிந்தங்கியுள்ளதை கருத்தில்கொண்டே இந்த நியமனம் வழங்கப்படுவதாகவும் ஆயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியாக ஆயர் அவர்கள் குறிப்பிட்ட நிலையில் 31.12.2022ம் திகதியுடன் தற்போதைய அதிபர் ஓய்வு பெறவுள்ளதால், அதிபர் நியமனம் முக்கியமான ஒன்றாக பர்க்கப் படுகிறது.
தொடரும் குழப்ப நிலை
கத்தோலிக்க திருச்சபைகளிடம் இருந்து பாடசாலைகளை 1968ம் ஆண்டு இலங்கை அரசு பெறுப்பெடுக்கும் போது, அதிபர் நியமனம் இடம் பெறும் போது ஆயரின் ஆலோசனையுடன் அதிபர் நியமனத்தை மதித்தியரசு மேற்கொள்ள வேண்டும் எனும் அறிவுறுத்தல் இருதரப்பு உடன் படிக்கையிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு பாடசாலை ஆசிரியர் சேவையில் உள்ளவர் அதிபராக உள்ள நிலை மட்டுமல்லாது, இலங்கையிலும் பல பாடசாலைகளில் ஆயரின் ஆலோசனையுடன் ஆசிரியர் சேவையில் உள்ள அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் அதிபர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலை உள்ளமை சுட்டிக் காட்டத் தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில் புனித மிக்கல் கல்லூரியின் அதிபர் நியமனத்தில் மட்டும் விதி மீறல் இடம் பெறுவதாக பாடசாலைச் சமூகம் சுட்டிக் காட்டுகிறது.
அன்மைக் காலமாக பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை முக்கியஸ்தர்கள் வெளியிடுவதால் பலரும் குழப்பத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நகரின் மிக முக்கிய பாடசாலையின் எதிர் காலத்தை யார் காப்பாற்றுவது என்ற வினா சகலரிடமும் எழுந்துள்ளது.