நாடாளுமன்றக் குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்!
பொது நிதி மற்றும் பொது நிறுவனங்களின் நாடாளுமன்றக் குழுக்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க (Mayantha Dissanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் முன்னாள் COPF தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர். ஹர்ஷ டி சில்வாவுக்குப் (Harsha de Silva) பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப்) தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார (Ranjith Bandara) நியமிக்கப்பட்டுள்ளார்.'
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை (Eran Wickramaratne) தோற்கடித்து (16க்கு 7) கோப் தலைவராக நியமிக்கப்பட்டார்.