GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

Department of Examinations Sri Lanka Sri Lankan Schools Education
By Vironika Jun 23, 2026 03:59 PM GMT
Report

அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை நேற்று (22) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.

GIT பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் | Applications Called For Git Examination

 விண்ணப்பங்கள்

இதற்கமைய, அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது அதிபர் அல்லது பாடசாலைத் தலைவர்கள் ஊடாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிபர்கள் அல்லது தனியார் பாடசாலைத் தலைவர்கள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றுள் ஒன்றிற்குள் பிரவேசித்து, உரிய அறிவுறுத்தல்களைத் தெளிவாகப் படித்துப் பார்த்து, துல்லியமாக ஆன்லைன் முறை ஊடாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அத்துடன், இப்பரீட்சைக்கு விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்க முடியாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்பரீட்சைக்காக, அரசு மற்றும் தனியார் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொற்களைப் (Password) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்பதுடன், அதன் அச்சிடப்பட்ட பிரதியொன்றை (Printout) எடுத்து, தேவையான போது சமர்ப்பிப்பதற்காகத் தங்களது பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் பரீட்சைகள் திணைக்களம் தனது அறிக்கையில் அறிவுறுத்தியுள்ளது.

பொசன் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொசன் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மதுபானசாலைகளுக்கு பூட்டு

2026 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்று, 2027 ஆம் ஆண்டில் முதன்முறையாக உயர்தரப் (A/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே இப்பரீட்சைக்குச் சமர்ப்பிக்க முடியும்.

மேலும், தனியார் பாடசாலை மாணவர்களின் அனைத்து விபரங்களும் தரவு அமைப்பில் (Data system) உள்ளிடப்பட்ட பின்னரே அதற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டணங்களைச் செலுத்திய பின்னர் மீண்டும் புதிய மாணவர்களை உள்ளடக்க முடியாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் வினவல்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் அல்லது 011 2784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US