ஆப்பிள் இடத்தை பிடித்த தக்காளி!
தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை விண்ணை தொட்டுள்ளதாக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கூட தக்காளி விற்கப்பட்ட காலமும் உண்டு.தக்காளி விலை போகாமல் நீர் நிலைகளில் கொட்டப்பட்ட காலமும் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ஒரு தக்காளி 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதில் கோவையில் ஆப்பிள், தக்காளி இரண்டும் ஒரே விலை.
தமிழகத்தின் கோவை சந்தைக்கு கோலார், ஓசூரிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கனமழையாலும், தக்காளி ஒரு கிலோ 110 முதல் 130 வரை விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் 140 ரூபாய்க்கு தக்காளி விற்கப்படுகிறது.
அதேவேளை அங்குள்ள் ஒரு காய்கறி பழ விற்பனை அங்காடியில் ஆப்பிளுக்கு இணையாக தக்காளி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விலை அதிகரிப்பால் தமிழக மக்கள் வழக்கமாக ஒரு கிலோ வாங்குபவர்கள் கூட கால் கிலோ என்ற அளவில் வாங்கிச்செல்கின்றனர்.
இந்நிலையில் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதுடன் அதில் 85 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி கிடைக்கும் எனவும் தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.