அனோஜனுக்காக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் ; சிக்கலில் சவுதி சென்ற இலங்கை உயரதிகாரிகள் குழு
இஸ்லாமிய நபிகள் நாயக அவதூறாகச் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைக் பிரஜையான அனோஜன் சிவராசாவின் மரண தண்டனைக்கு எதிரான மேன்முறையீடு இன்று (11) ஞாயிற்றுக்கிழமை சவூதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சவூதி தலைநகரான ரியாத்தில் இடம்பெற்ற அண்மையத் தாக்குதல்களினால் இலங்கைக்கு திரும்புவதற்கான திட்டமிடப்பட்ட விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கைக் சட்டக் குழுவினர் தற்போது ரியாத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

சிறைத்தண்டனை
இலங்கை மற்றும் சவூதி சட்டக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் வாயிலாக இந்த மேன்முறையீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது
அனோஜன் சிவராசாவிற்கு ஆரம்பத்தில் கீழமை நீதிமன்றம் 05 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டின் போது மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பினை மாற்றி அமைத்து அவருக்கு மரண தண்டனை விதித்தது.
மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்காக இலங்கையிலிருந்து சிறப்புச் சட்டக் குழுவொன்று சவூதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டது.
சவூதிக்கான இலங்கைத் தூதுவர் ஒய்.எல். அமீர் அஜ்வத், ஜெட்டாவிற்கான இலங்கையின் கொன்சல் ஜெனரல் நீதிபதி முகம்மது லாபிர் மற்றும் சில்மி ரிபர்தீன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
சவூதி உயர் நீதிமன்றமானது கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சட்ட மற்றும் நடைமுறை அடிப்படையில் மீள்பரிசீலனை செய்யும் நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பாகும்.
இந்நிலையில், சவூதி தலைநகரான ரியாத்தில் இடம்பெற்ற அண்மையத் தாக்குதல்களினால் இலங்கைக்கு திரும்புவதற்கான திட்டமிடப்பட்ட விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், இலங்கைக் சட்டக் குழுவினர் தற்போது ரியாத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர்.