பிரதமர் அலுவலகத்தில் இவருக்கு எப் பதவியும் வழங்கப்படவில்லை; பகிரங்க அறிவிப்பு
பிரதமரின் முஸ்லீம் விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் என "ஷிராஸ் யூனுஸ்" நியமிகப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் அத் தகவலை அறிந்துகொண்ட பிரதமர் அலுவலகம், நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவியும் வழங்கப்படவில்லை என பகிரங்கப்படுத்தியுள்ளது.
அதோடு இவ்வாறான நிலையில் பிரதமருக்கு எதிராகவும், பொதுஜன பெரமுனவிற்கு எதிராகவும் குறித்த நபர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையை பிரதமர் ஊடகப் பிரிவு வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதிலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறதாக கூறும் சமூக ஆர்வலர்கள், அமைச்சரின் இணைப்பாளர், பிரதமரின் இணைப்பாளர் என பலர் , பொதுமக்கள் பலரை ஏமாற்றுகிறார்கள் என்றும் அப்படியானவர்களிடம் கவனமாக இருக்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
