இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக அனுர பதவியேற்பு!
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் 9 ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
அதி விசேட வர்த்தமானி
அதேவேளை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (22) வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ், மேற்படி சட்டத்தின் 64(2) பிரிவின் கீழ், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.