அநுர அரசாங்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த முன்னாள் ஜனாதிபதி!
எதிர்வரும் காலங்களில் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கை, பொலன்னறுவை புதிய நகரத்தின் வித்யாலோக பிரிவெனவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் 5 வருடங்கள் நிலைத்திருக்கும் என்று கூற முடியாது. இடைநடுவிலும் கவிழும் சாத்தியம் உள்ளது.
அதன் காரணமாக நான் தற்போதைக்கு அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளும் எண்ணம் இல்லை.
எங்களுடைய சர்வஜன அதிகாரம் கட்சிக்கு மிகச் சிறந்த தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார்.
அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் நான் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.