முன்னாள் அமைச்சரும் மனைவியும் கைது
இலங்கையில் முன்னாள் அமைச்சர் ஒருவரும், அவரது மனைவியும் அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியுமே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்தியமை
2014 ஆம் ஆண்டில் பிங்கிரிய மற்றும் நாரம்மல ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென, கனியவள கூட்டுத்தாபனத்துக்கு உரித்தான சுமார் 61,46,000 ரூபாய் நிதியை முன்னாள் அமைச்சர் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு பெற்றுக்கொண்ட நிதியினை நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்