விருப்பு வாக்கு எண்ணிக்கை எப்படியிருப்பினும் அனுரவே ஜனாதிபதி!
நடந்து முடிந்த 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் படி அனுர திஸாநாயக்க மேலிடத்திலிருந்து வெற்றி பெற்றுள்ளார் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி அனுர திஸாநாயக்க 13 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை
எவ்வாறாயினும், எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்தைப் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பத்தேர்வு எண்ணும் தேர்தல் சட்டத்தின்படி செய்யப்பட வேண்டும் .
எனினும் , இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்கு எண்ணிக்கை முடியும் வரை தேர்தல் ஆணையம் இறுதி முடிவை வெளியிடக் கூடாது என்று அவர் கூறினார்.
மேலும் இரண்டாவது விருப்புரிமையின் பெறுபேறு எதுவாக இருந்தாலும் அது அனுர திஸாநாயக்கவின் வெற்றிக்கு இடையூறாக அமையாது எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரண்டாவது மூன்றாவது விருப்புவாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் பொதுமக்கள் அச்சமடையக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தேர்தல் செயற்பாடுகள் வெளிப்படையான விதத்தில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அவர், எந்த மோசடியும் இடம்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.