அனுர ஹிட்லரின் மறுபிறவியா என சந்தேகம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க ஜெர்மனியின் சர்வாதிகார ஆட்சியாளராகவிருந்த அடொல்ப் ஹிட்லரின் மறுபிறவியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வு நாட்டின் விதியை தீர்மானிக்க கூடிய ஓர் மிக முக்கியமான தருணத்தில் நடைபெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்களை பயன்படுத்தி அரசாட்சியை கைப்பற்றுவதற்கு முயற்சித்த பாசிசவாதிகளுக்கு எதிராக போர் புரிவதற்கு படைவீரர்களுக்கு சட்ட ரீதியான உரிமை இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்றாளர்கள் என காட்டிக்கொண்டு சோசலிச பாணியில் ஆட்சிக்கு வருவது புதிய ஓர் அனுபவமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹிட்லர் மற்றும் அநுரகுமார திசாநாயக்க ஆகிய இருவரும் ஆட்சிக்கு வந்த முறைமையில் ஒற்றுமை காணப்படுவதாகவும் தொழிற்சங்க தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுக்கும் எச்சரிக்கை ஹிட்லரின் ஜெர்மனியை நினைவுபடுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே அநுரகுமார திசாநாயக்க என்பவர் ஹிட்லரின் மறு பிறவியா என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது என உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.