அதிகார ஆசையற்ற அரசியல்வாதி ; அநுரகுமார திசாநாயக்காவின் எடுத்துக்காட்டு
அரசியல் கலாச்சாரத்தில் புதிய மாற்றத்தைக் குறிக்கும் நபராக அநுரகுமார திசாநாயக்கவின் தாய் ஆட்டோவில் செல்லும் புகைப்படம் தற்போது எல்லோரையும் ஆச்சிரியத்திற்கு உட்படுத்தியுள்ளது.
பிரதேசசபை உறுப்பினர்களிலிருந்து தொடங்கி ஜனாதிபதிகள் வரையிலும், ஆளுக்கொரு அதிசொகுசு வாகனங்களில் குடும்பமே பயணிக்கும் பாரம்பரியம் நிலவிய நாட்டில் — எளிமையும் ஒழுக்கமும் கலந்த அரசியல் வாழ்க்கையை முன்னெடுத்து வரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மீண்டும் ஒரு விவாதத்துக்குரிய முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

முழு அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துக்கள், பாராட்டுகளும் விமர்சனங்களும் இருந்தபோதிலும், அக்கட்சியின் தலைவராக உள்ள அநுரகுமார திசாநாயக்காவின் தனிப்பட்ட கண்ணியமும் ஒழுக்கமும் இதுவரை எந்த அரசியல் எதிரிகளாலும் கேள்விக்குறியாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலின் சீரழிவை விமர்சிக்கும் போதெல்லாம், “அதிகாரம் அல்ல — சேவை” என்பதையே தன் கொள்கையாகக் கொண்டு செயல்படும் அநுரகுமார திசாநாயக்கா, பொதுமக்களிடையே “ஒழுக்கமான அரசியல்வாதி” என்ற நம்பிக்கையை நிலைநிறுத்தி வருகிறார்.