பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மிக முக்கியம்; வஜிர அபிவர்தன
நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டை உலகத்தில் முன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் எம்.பியுமான வஜிர அபிவர்தன, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிராக சில அரசியல் குழுக்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி இலங்கையில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் , பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறான சட்டங்கள் அமலாக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகுக்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
இதன்போது ஒரு நாடு கடனை வாங்கும் போது, வாங்கிய கடனை கையாளும் முறைகள், கடனை செலுத்தும் முறை ஆகியவற்றை சரியாகக் கையாள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அப்போதுதான் அந்த நாடு உலகில் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.