யாழில் மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு; தொடரும் சோகங்கள்
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் அதிகளவான ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (26) இரவு ஐஸ் போதை பொருளை பயன்படுத்திய நிலையில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதனை அடுத்து இளைஞர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.
பிள்ளைகளின் எதிர்காலம் பெற்றோர் கைகளில்
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைகாலமாக இளையோரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துவருவதுடன் இதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாது யாழில் திருட்டு குற்றச்செயல்களும் , சமூக பிறள்வான நடத்தைகளும் இளையோர் மத்தியில் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டப்படும் அதேவேளை பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் நடத்தை தொடர்பில் கவனமெடுக்க வேண்டும்.
இல்லையெனில் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு இறுதிசடங்கு நடத்திவைத்த காலம்போய் பெற்றோர்களே தமது பிள்ளைகளுக்கு ஈமைக்கியை நடத்த வேண்டிய காலம் வந்துவிடும் என சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.