மின் கட்டணத்துடன் மற்றுமொரு வரி இணைப்பு!
ஒக்டோபர் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்துடன் 2.5% சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
மின் பாவனையாளரிடமிருந்து இந்த வரியை அறவிட வேண்டியுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் மின்சார சபை குறிப்பிட்டது.
நிதியமைச்சிடம் கோரிக்கை
மின்சாரக் கட்டணம் அண்மையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதற்கான வரி அதிகரிப்பையும் நுகர்வோரிடமிருந்து வசூலிக்க வேண்டாம் என நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்ததாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
எனினும் அவ்வாறு செய்ய முடியாத காரணத்தினால், கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.
அதேவேளை, இந்த வரியிலிருந்து நீர் கட்டணம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.