மற்றுமொரு மர்ம மரணம்; போலீசார் தீவிர விசாரணை
புத்தளம் பழைய மன்னார் வீதியிலுள்ள உடையார்வாவியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள விலையில் போலீசார் தீவிர விசாரணைக்கையா மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் புத்தளம் பழைய மன்னார் வீதியில் வசிக்கும் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த நபர் புத்தளத்தில் உள்ள இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிபவர் நிலையில், உயிரிழந்தவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.
வாவியில் சடலம்
இந்நிலையில் இன்று (05) காலை உடையார் வாவிக்கு அருகில் குறித்த நபரின் காலணிகள் மற்றும் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து , அப்பகுதி மக்கள் வாவியை சோதனையிட்டபோது, அந்த நபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் ஆழ்கடல் மீன்பிடியில் கைத்தேர்ந்தவர் என்பதனால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர் ஒருவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது