ஈரானில் வீழ்த்தப்பட்ட மற்றொரு முக்கிய புள்ளி ; ஹோர்முஸ் நீரிணையை முடக்கியவருக்கு நெதன்யாகு கொடுத்த ஷாக்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி அலிரேசா தங்சிரி மீதான இந்தத் தாக்குதல் நேற்று (25) இரவு நடத்தப்பட்டதாகவும், இதில் ஈரான் கடற்படைத் தளபதி உட்பட பல முக்கிய அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி
இது குறித்து அவர் கூறுகையில், "ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைத்து, கப்பல் போக்குவரத்தைத் தடுத்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நேரடிப் பொறுப்பான நபர் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டார்," என்றார்.
பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடங்கியதில் இருந்து, ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பாதுகாப்புத் தலைவர் அலி லரிஜானி உட்பட பல உயர்மட்ட ஈரான் அதிகாரிகளைப் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரானில் பொதுமக்கள் மீதான பாதிப்பு மிகவும் பாரதூரமாக உள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 452 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 1,937 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் பிரதி சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 4,000 பெண்கள் மற்றும் 1,621 குழந்தைகள் உட்பட குறைந்தது 24,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.