இலங்கையில் மீண்டுமொரு எரிவாயு அடுப்பு வெடிப்பு: எங்கு தெரியுமா?
ஹட்டனில் எரிவாயு சமையல் அடுப்பில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று (07) மதியம் ஹட்டன் வெலிஓயா தோட்ட மேற்பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் உள்ள பெண் சமைத்துக் கொண்டிருக்கும் போது, எரிவாயு அடுப்பில் உள்ள ரெகுலேட்டர் வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தின் போது உயிர் சேதம் ஏதும் ஏற்படாவிட்டாலும் எரிவாயு அடுப்பு சேதமாகியுள்ளதுடன் பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த எரிவாயு சிலிண்டர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.