நிதி அமைச்சுக்கு வெளியான அறிவிப்பு!
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனை இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நிதி அமைச்சுக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர நிதி அமைச்சின் செயலாளருக்கு இதனை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை மீதான விவாதம் இன்று (01) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை திருத்தங்களுடன் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.