மாணவர்களுக்கான அனர்த்த நிவாரண உதவி தொடர்பில் வெளியான அறிவிப்பு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.

அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துத் தெரிவித்த வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் தலா 25,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.