கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விஷேட அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு 4,672 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆரம்பமாகவுள்ள பாடசாலை தவணையில் இந்த அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது கடினமான பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களுக்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர் நாடாளுமன்றம்
இதேவேளை மாணவர் நாடாளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாடளாவிய ரீதியில் சுமார் 3000 மாணவர் நாடாளுமன்றங்கள் செயற்படுவதாகவும் அதன்மூலம் சிறுபராயம் முதல் பொறுப்புடன் கூடிய ஒழுக்கமான, நேர்மையான தலைமைத்துவத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்துவதற்கு மாணவர்களை பயிற்சியளிப்பதே தமது அமைச்சின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.