வடமாகாண ஆளுநர் விடுத்த அறிவிப்பு
வடமாகாண ஆளுநராக பதவியேற்ற நாளில் இருந்து தமது பணிகளை கொழும்பில் இருந்து ஆரம்பித்து விட்டதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநராக பொறுப்பேற்றதன் பின்னரான நிலைமைகள் குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தொிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிடம் இருந்து ஆளுனராக நியமனத்தை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து எனது கடமைகளை கொழும்பிலிருந்து செயல்படுத்தி வருகிறேன்.
வடமாகாணத்தில் ஆளுநராக செயல்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் மாகாண பிரதம செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளேன்.
ஆகவே எனது யாழ்.அலுவலகத்துக்கு வருகை தருவதற்கு முன்பாகவே எனது செயற்பாடுகளை கொழும்பிலிருந்து ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்தவாரம் யாழ்ப்பாணம் வருவேன் எனவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.