பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்; அதிர்ச்சியில் உறைந்த பெண்!
இந்தியாவின் ஆந்திராவில் பார்சலில் மின்சாதனப் பொருட்கள் கேட்டிருந்த பெண்ணுக்கு மனித உடல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எண்டகண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி. இவர் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டுவதற்காக, சத்ரிய அறக்கட்டளையில் நிதி உதவி பெற்று வந்துள்ளார்.
பார்சலை திறந்து பார்த்த பெண்ணுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி
அந்த அறக்கட்டளை ஏற்கனவே சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் டைல்ஸ் மற்றும் மின்சாதனப் பொருட்களை கேட்டதாகவும், விரைவில் அனுப்பி வைக்கப்படும் என அறக்கட்டளை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மின்சாதனப் பொருட்களை எதிர்பார்த்துக் காத்திருந்த துளசிக்கு, மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வந்திருந்த பார்சலை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் பாதி ஆண் சடலம் இருந்தது.
அதுமட்டுமல்லாது ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் பெண்ணை கொன்று விடப்போவதாக கொலை மிரட்டல் கடிதமும் இதில் இருந்தது அதிர்ச்சியடைந்த துளசி பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவரின் வீட்டிற்குச் சென்ற பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.
அத்துடன் அந்த பார்சலை லாரி நிறுவன பார்சல் சர்வீசில் புக்கிங் செய்த நபர் யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் இதற்கு முன்னர் துளசிக்கு பார்சல் மூலம் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை அனுப்பிய நபரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் மின்சாதனப் பொருட்கள் கேட்டிருந்த பெண்னுக்கு அழுகிய மனித உடல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.