லயோனல் மெஸ்ஸியை வியப்பில் ஆழ்த்திய ஆனந்த் அம்பானி!
இந்தியா வந்துள்ள அர்ஜென்டினா கால்பந்து அணியின் அணித்தலைவர் மெஸ்ஸிக்கு இந்திய தொழிலதிபர் ஆனந்த் அம்பானி ,ந்திய ரூபாவில் சுமார் .10.91 கோடி பெறுமதியான கைக்கடிகாரத்தை பரிசளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தொழிலதிபர் ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு ரிச்சர்ட் மில் RM 003 V2 ஆசிய எடிஷன் கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.

உலகிலேயே 12 கைக்கடிகாரங்கள் மட்டுமே...
உலகிலேயே இந்த எடிஷனில் 12 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் அணித்தலைவரும், 8 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி தனது இன்டர் மியாமி அணியினருடன் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த வருகையின் போது, முதல் நாளில் கொல்கத்தாவில் தனது உருவச்சிலையைத் திறந்து வைத்த மெஸ்ஸி, பின்னர் ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
இரண்டாம் நாள் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்வில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மெஸ்ஸிக்கு தனது கையெழுத்திட்ட டிஷர்ட்டைப் பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் மகாராஷ்டிர முதல்வர் மற்றும் சுனில் சேத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், மூன்றாம் நாள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஐசிசி (ICC) தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் '10 ஆம் இலக்க' ஜெர்சியை மெஸ்ஸிக்கு வழங்கிக் கௌரவித்தார்.