மூளைக்காய்ச்சல் பரவல் : ஒருவர் உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 கைதிகள் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மூளைக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 8 சிறைக்கைதிகள் அதே அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்த நபர் கொலை குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பெயரில் 30.08.2023 அன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், மாத்தறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.