இலங்கையில் பலரையும் நெகிழவைத்த முன்மாதிரியான திருமணம்!
இலங்கையில் இஸ்லாமிய தம்பதிகள் தமது திருமணத்தை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தியுள்ளமை பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கேகாலை- ஹெம்மாதகமயில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அவர்களின் திருமணம் நேற்றையதினம் (9) சிறப்பாக இடம்பெற்றது. Fazlan A Cader மற்றும் Afra Akram ஆகியோரின் திருமணமே அங்கு இடம்பெற்றுள்ளது.
குழந்தைகளுக்கு பரிசு
அதுமட்டுமல்லாது திருமண தம்பதிகள் அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசில்களையும் தமது கைகளால் வழங்கி இருந்தமை இல்ல சிறுவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்துள்ளது.
அதேவேளை பல கோடிகளை செலவு செய்து பலரும் ஆடம்பரமாக ஹோட்டல்களில் தமது திருமணத்தை நடத்திவரும் நிலையில் இந்த தம்பதிகளின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது.
இந்நிலையில் ஏழைக் குழந்தைகள் இருக்கும் இல்லத்தில் முன் மாதியான செயல்பாடாக தமது திருமணத்தை நடத்திய தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் கூறி வருகின்றனர்.