பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு
மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஜா-எல வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளரான 42 வயதான டொன் சுஜித் என்ற உக்குவா என்பவர் உயிரிழந்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த நபர், இது தொடர்பான கொலைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட உக்குவா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘வெல்லே சாரங்கா’ என்ற குற்றவாளியின் சகோதரியின் கணவர் என்பது பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.