தொங்கும் தொப்பையை குறைக்க ஈஸி வழி!
கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஊட்டச்சத்து. ஆனால், உடலில் கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்.) அதிகரித்தால், ரத்த நாளங்களில் படிந்து, ரத்த ஓட்டத்தை தடுத்துவிடும்.
இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

உடலில் அதிக கொழுப்பு சேருவது
மேலும் உடலில் அதிக கொழுப்பு சேருவது உடல் பருமன், கழுத்து வலி, முதுகு வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுத்து விடும்.
உடலில் கொழுப்பு தொடர்ந்து சேர்ந்து கொண்டிருந்தால் நீரிழிவு, கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களையும் உண்டாக்கலாம். எனவே, கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க சில எளிய பழக்கங்களை பின்பற்றுவது அவசியம்.
தினமும் குறைந்தபட்சம் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
ஒவ்வொரு வேளை உணவிலும் தேவையான அளவு புரதம் சேர்த்துக்கொள்ளவும்.
தினசரி ஒரு மணி நேரம் நடங்கள். ஸ்நாக்ஸ் எனப்படும் நொறுக்குத்தீனிகளை தவிர்த்து அதற்கு பதிலாக பழங்களை உட்கொள்ளலாம்.
வாரத்திற்கு குறைந்த பட்சம் 3-5 முறை உடற்பயிற்சி செய்யுங்கள்.
தினசரி உணவில் காய்கறிகளை தவறாமல் சேர்க்கவும். தினமும் 7-9 மணிநேர உறக்கம் தேவை.
வெளி உணவுகளை அதிகம் சாப்பிடுவதை கட்டுப்படுத்துங்கள். மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.