தன்னைத் தானே சுட்டு இராணுவ அதிகாரி உயிர்மாய்ப்பு
ஹொரணை, தொம்பகொடவிலுள்ள இலங்கை இராணுவ ஆயுதப்படையின் சர்ஜன்ட் மேஜர் ஒருவர் இன்று (09) தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக அங்குருவாதொட்ட பொலிஸார் கூறியுள்ளனர்.
துத்திரிபிட்டியைச் சேர்ந்த குறித்த அதிகாரி, அவரது வீட்டிலிருந்து தினமும் பணிக்கு வந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அங்குருவாதொட்ட பொலிஸாரின் கூற்றுப்படி, நான்கு நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இராணுவ அதிகாரி தன்னைத் தானே சுட்டு உயிரிழந்தமைக்கு தனிப்பட்ட காரணங்கள்தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் குறித்து முதற்கட்ட விசாரணையை நடத்த ஹொரணையின் பதில் நீதிவான் சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதுடன், அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகள் மேற்ஒண்டுள்ளனர்.