வீட்டு வைத்தியமாக பயன்படும் பழமையான பொருள்
பழைமையான காலத்தில் இருந்து மூலிகை தன்மை கொண்டதாக பயன்படுத்தப்படுகின்ற பொருள் படிகாரக்கல். இதனை வீட்டு வைத்தியமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. அந்தக் காலத்தில் இதனை வலிகளை போக்கும் தைலமாக பயன்படுத்தி உள்ளனர்.
வைத்தியம்
படிகாரம் பற்களுக்கு மிகவும் நன்மை தருவதோடு இது இயற்கையாக வாய்க்கு புத்துணர்ச்சி தருகின்றது. தண்ணீரில் படிகாரம் கலந்து வாய் கொப்பளிக்க பல் வலி நிவாரணம் கிடைக்கும். படிகாரம் வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.
படிகாரத்தை தடவும் போது இரத்தக் கசிவு நிற்கும். காயம்பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால் இரத்தக் கசிவு நின்றுவிடும்.
படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன இது காயத்தின் மீது தொற்று ஏற்படும் அபாயத்தை நீக்குகிறது.
படிகாரம் இருமல் பிரச்சனையை நீக்குகிறது. படிகாரம் கலந்த நீரில் வாய் கொப்பளிக்க தொண்டை புண் குணமாகும். படிகாரப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால், சிறிது நேரத்தில் இருமல் நிவாரணம் கிடைக்கும்.
படிகாரம் பல சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். படிகாரம் முகத்திற்கு இயற்கையான கிளென்சிங் பொருளாக செயல்படுகிறது.
படிகார நீரில் முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் முகத்தை சுத்தம் செய்யலாம். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும்.
ஷாம்பு முடியை சுத்தப்படுத்துகிறது, ஆனால் ஷாம்புவால் உச்சந்தலையில் சேரும் அழுக்குகளை அகற்ற முடியாது. இதன் காரணமாக தலையில் பேன்களும் ஏற்படுகின்றன. படிகார நீரில் கழுவினால் முடியின் வேரில் இருந்து சுத்தமாகும். தூசி மற்றும் அழுக்கு வெளியேறும். இது பேன்களையும் கொல்லும்.
படிகாரம் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சிறுநீர் தொற்றில் இருந்து விடுபட அந்தரங்கப் பகுதியை படிகாரம் கலந்த நீரில் கழுவலாம்.