மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய நோயாளர் காவு வண்டி
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி , புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியது.
விபத்தில் சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளனதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் விபத்து இடம்பெற்ற பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.