யாழில் இளைஞனின் உயிரை பலியெடுத்த விபத்து
யாழில் வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அச்சுவேலியில் இருந்து தனது நண்பனுடன் கொடிகாமத்திற்கு சென்று விட்டு, சாவகச்சேரி - புத்தூர் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அவ் வேளை, வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானர்கள்.
விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.