கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்க பெண்ணின் வைரல் டுவிட் பதிவு!
தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ள நாட்டு மக்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) வீட்டுக்கு செல்லுமாறு கோரி சமூக வலைத்தளத்தில் #GoHomeGota என்ற கோஷம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அமெரிக்க பெண் எழுத்தாளர் ஒருவரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெல்ஸை நெல்சன் (Kelsye Nelson) என்ற அமெரிக்க எழுத்தாளரே இவ்வாறு எதிர்ப்பு பதிவு வெளியிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Whoa! Didn't expect that blow up. We're making a lot of jokes about complimentary white van pick up next time I fly into CMB. Which is funny, but also kinda scary. https://t.co/JKT3g2aDPX
— Kelsye Nelson (@Kelsye) March 15, 2022
அந்த பதிவில்,
நான் #GoHomeGota டுவீட் செய்வேன், ஆனால் நான் அமெரிக்க நாட்டவர் என்பதால், #ComeHomeGota மிகவும் பொருத்தமானதாக இருக்கும். நாட்டை சீரழிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக பல இலங்கையர்கள் நிலைப்பாட்டை எடுப்பதை பார்க்க ஊக்கமளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு இலங்கை சமூக வலைத்தள பயனாளர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.