சீதையம்மன் கோவிலில் அமெரிக்க தூதுவர் வழிபாடு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஆலயத்துக்கு வருகை தந்த தூதுவரை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஆலய அறங்காவலர் சபையின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட ஆலய நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
இதன்போது தூதுவர் ஜூலி சங்கிற்க்கு ஆலய நிர்வாக சபை சார்பாக பொன்னாடை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.