அமெரிக்காவால் கடுப்பாகிய சீனா! எதிர்ப்பை மீறி தைவான் சென்ற முக்கியஸ்தர்
அமெரிக்கா பிரநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று தைவானில் கால் வைத்திருக்கிறார்.
ஆசிய நாடுகளான மலேசியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்காவின் பிரநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தான் தைவானுக்கும் செல்லப் போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்த சீனா, நான்சி பெலோசி கால் வைத்தால் சும்மா இருக்கமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பின்னர் 1997ம் ஆண்டு முதல் தைவான் தன்னாட்சிப் பிரதேசமாக இயங்கி வருகிறது.
ஆனால், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், தைவானில் சீனா நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து கேட்டறிய அங்கு நான்சி பெலோசி இன்று சென்றுள்ளார். 25 வருடங்களின் பின்னர் அமெரிக்க வி.ஐ.பி ஒருவர் தைவானில் இறங்கியுள்ளார்.
சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு நான்சி பெலோசி சென்றுள்ளதால், தைவானை சுற்றி 6 இடங்களில் இராணுவப் பயிற்சிகளை செய்ய சீனா ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்குள் இராணுவக் கப்பலை அனுப்ப எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை தூக்கிகடாசிவிட்டு, எடுத்த தீர்மானத்தில் உறுதியாக இருக்கும் சீனா, தைவானிலும் அமெரிக்க படை விமானங்களை கருத்திற்கொள்ளாமல், கவனிக்காமல் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
