திமிங்கலத்தின் தோலில் இருந்து பெறப்பட்ட பொருள்... சந்தேக நபர்கள் அதிரடி கைது!
இலங்கையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் உள்ள திமிங்கலங்களின் தோலில் இருந்து பெறப்பட்ட அம்பர் கையிருப்பை 50 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் எல்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய 2 பிரதான சந்தேக நபர்களையும் மேலும் 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிலோ 234 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பிடிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.