Reecha சூரியகாந்தி செடி வளர்ப்பு; எவ்வளவு பயன்கள் தெரியுமா!
தாயகத்தில் அமைந்துள்ள ReeCha Organic Farm இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாட்டு வாழ் புலம்பெயர் தமிழர்களிடையேயும் வெகு பிரபலம். இங்கு பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல பயனுள்ள , வருமானத்தை ஈட்டிதரும் கால்நடைகள் வளர்ப்பு, விவசாயம், என்பனவும் உள்ளது.
அதாவது இது நாம்மால் முடியுமா என தயங்குபவர்களிற்கு, ReeCha Organic Farm முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு விடயங்களும் உங்களுக்கு நம்பிக்கையை தரும். அந்தவகையில் எமது மண்ணிற்கு எந்த தாவரத்தையும் வளவரைக்கும் பண்பு இயல்பாகவே உள்ளது.
எனினும் சில தாவரங்கள் நம் காலநிலைக்கு உத்துவராது என நினைத்தவற்றையும் , ReeCha முறியடித்துள்ளது. முக்கியமாக கறுவா பயிர் செய்கை, மலைநாட்டில் மட்டுமே இதுவரை விளைந்த கறுவா, தற்போது எமது மண்ணிலும் பயிரிடலாம் என்ற நம்பிக்கையை ReeCha கொடுத்துள்ளது.
அந்தவகையில் தற்போது சூரியகாந்தியும் ReeCha இல் பயிரிடப்பட்டுள்ளது.
சூரியகாந்தி நன்மைகள்....
சூரியகாந்தி மலர் மிகவும் அழகானது என்பதை தாண்டி, இதன் அடிமுதல் நுனிவரை மிகவும் பயனுள்ளது. இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது, அவை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சூரியகாந்தி விதைகளை மிதமான அளவில் உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சூரிய காந்தி விதையில் இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன.
களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது. குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும்.