தோஷங்கள் நீங்க அமாவாசை தினத்தன்று காக்கைக்கு ஒரு பிடி சாதம்!
அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் நம் வீட்டிற்கு வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என நபப்படுகின்றது.
இந்நிலையில் அமாவாசை தினத்தில் காக்கைகளுக்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. எனவே ஆடி அமாவாசையில் காகத்திற்கு சாதம் கொடுக்க மறக்காதீர்கள்.
அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
முன்னோர்கள் ஆசி கிடைக்கும்
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்திற்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.
தோஷங்கள் நீங்கும்
முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது பித்ருக்களின் ஆசி நமக்கு கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள், குடும்ப பிரச்சினைகள்தீரும். குழந்தைபாக்கியம், கல்யாண யோகம் கிட்டும். காக்கை சனி பகவானின் வாகனம்.
சனிபகவான் எமதர்மர் அருள் கிடைக்கும்
அதுமட்டுமல்லது அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானை திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.
அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.
காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சியை தரும். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள்.