இறுதிச் சடங்கில் தகராறு ; முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தெமட்டகொடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் தெமட்டகொடை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாகொடை வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நேற்று (29) மாலை கொழும்பு தெமட்டகொடை நேஹின்ன பிரதேசத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது தெமட்டகொடை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளருக்கும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளரை பலமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.