இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தினமும் இதனை சாப்பிடுங்கள்!
உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான உணவுப்பொருள் பாதாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
உண்மையில் ஆயுர்வேதத்திலும் பாதாம் சிறந்ததொரு உணவு மற்றும் மருந்தாக கருதப்படுகிறது.
சமநிலை
வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமநிலையில் பராமரிக்க பாதாம் உதவுகிறது.
பாதாமை ஊறவைத்து தோல் நீக்கியோ அல்லது அப்படியேயோ சாப்பிடலாம்.
தினமும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருக்கும்.
பாதாம் பருப்புகளை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் சாப்பிடுவதன் மூலம் உடல் பலவீனம், நீரிழிவு நோய் என சில சிக்கல்களைத் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
நோய்களில் இருந்து பாதுகாப்பு
உடல் பருமன்
ப்ரீடியாபயாட்டீஸ் மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற மருத்துவக் கோளாறுகளுடன் தொடர்புடைய பல நோய்களில் இருந்து பாதாம் நமது உடலை பாதுகாக்கிறது.
தினமும் பாதாம் பருப்பை உட்கொள்வது உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கும், சருமத்தின் நிறம் மங்காமலும், அதன் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் பாதாம் உதவுகிறது.
சருமத்திற்கு சிறந்தது பாதாம்
சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றும் பாதாம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் உறுதியளிக்கிறது, பாதாம் பருப்பை தினசை 4 என்ற வீதத்தில் சாப்பிட்டு வந்தால், அழகு மேம்படும். இளநரை மற்றும் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகள் தடுக்கப்படும்.