யாழ்.மாவட்டத்தில் 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு கொடுப்பனவு!
யாழ்.மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு மே, யூன் மாதங்களுக்கான அரசாங்கத்தின் உதவிப் பணம் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று காலை ஊடகங்களை சந்தித்தபோதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ல நெருக்கடி நிலையை அடுத்து அரசாங்கம் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உதவிப் பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி யாழ்.மாவட்டத்தில் 78 ஆயிரத்து 442 சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கும், 27978 வறுமைப்பட்ட குடும்பங்களுமாக சேர்த்து 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு இந்த உதவிப் பணம் வழங்கப்படும்.
அத்துடன் அதற்கான பணிகளை சமுர்த்தி திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினால் எமது மாவட்டத்தில் கடற்றொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களும் இந்த உதவி வழங்கும் திட்டத்தில் உள்வாங்கப்படுவார்கள் என்றும் யாழ்.மாவட்டச் செயலர் மேலும் தெரிவித்தார்.