மந்தகதியில் அதிகாரிகள்; ஒ.எம்.பி.அலுவலகத்தின் மீது முன்வைப்பட்ட குற்றசாட்டு
விசாரணை என்ற போர்வையில் மக்களின் நேரத்தை வீணடிப்பதாக ஒ.எம்.பி.அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (22) காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தின் விசாரணை இடம்பெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பலர் கலந்துகொண்டு சாட்சியமளித்திருந்தனர்.
நம்பிக்கை இழந்த மக்கள்
இதன்போது விசாரணைகளில் கலந்துகொண்ட உறவுகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
ஏற்கனவே இந்த அலுவலகத்திற்கு நாம் பல ஆவணங்களை வழங்கியிருக்கின்றோம். இதில் எமக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லை.
இதுவரை எமது பிள்ளைகள் தொடர்பாக எந்தவிதமான பதிலையும் இந்த அலுவலகம் வழங்கவில்லை. அவர்களுக்கு வேலை இல்லாதமையினால் எமது நேரத்தை வீணடிக்கின்றார்கள் என்று தெரிவித்தனர்.