இலங்கையில் மீண்டும் இதற்கெல்லாம் அனுமதி! வெளியான அறிவிப்பு
நாட்டில் கொரொனா தொற்று பரவல் குறைந்த நிலையில், பல்வேறு துறைகளினதும் சேவைகளை வழமையான முறையில் முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
நாட்டில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் திருமண நிகழ்வுகள், உணவகங்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள் போன்ற சேவைகளை வழமையான முறையில் முன்னெடுக்க முடியமென தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் (Event Management) குழுக்களுக்கும் அவர்களது சேவைகளை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் பின்பற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை தடுக்க அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளனர்.