அமைதியாக இருந்தவர்களை பொங்கியெழவைத்த மஹிந்த குண்டர்கள்; தீக்கிரையான அலிசப்ரி வீடு!
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வீடு நேற்று இரவு தீக்கிரையாக்கப்பட்டது.
நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபஷ மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் பொது மக்களால் தீக்கிரையாக்கப்ட்டுவருகின்றது.
இந் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி வீடு பொதுமக்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் வெடித்த கலவரத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மக்கள் தங்கள் சித்தை அரசியவாதிகள் மற்றும் அவர்கள்து உடமைகள் மீதும் காட்டிவருகின்றனர்.
அதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவர் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.




