அட்சய திருதியை 2026 எப்போது? தங்கம் வாங்க உகந்த நேரம் இது தான்...
அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் நாம் வாங்கும் பொருட்கள் மேன்மேலும் வளரும்.
அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும். நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.

அட்சய திருதியை 2026
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14 வது நாளில் அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது.
அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் மூன்றாவதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி.
3-ஆம் எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பாகிறது.
யாழில் இளைஞர்கள் நடத்த காத்திருந்த பெரும் அசம்பாவிதம் ; இறுதியில் பொலிஸார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
அட்சய திருதியை 2026: ஏப்ரல் 19ஆம் திகதி 10:49 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் ஏப்ரல் 20ஆம் திகதி காலை 07:27 மணிக்கு முடிவடையும்.
நகை வாங்க உகந்த நேரம்: தங்கம் வாங்க ஏப்ரல் 19 காலை 10:49 மணி முதல் ஏப்ரல் 20 காலை 7:27 மணி வரை மிக உகந்த நேரமாகும். பெரும்பாலானோர் ஏப்ரல் 19, காலை முதல் மாலை வரை (முக்கியமாக 10:49 AM - 12:20 PM) நகை வாங்க சிறந்த நேரமாகக் கருதுகின்றனர்.
இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.